Thursday, 25 August 2016

மு.மேத்தா அவர்களின் படைப்புகள்:

மு.மேத்தா அவர்களின் படைப்புகள்:

1) திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்.
2) நடந்த நாடகங்கள்
3) அவர்கள் வருகிறார்கள்
4) வெளிச்சம் வெளியே வரவில்லை
5) முகத்துக்கு முகம்
6) ஒரு வானம் இரு சிறகு
7) மனச் சிறகு
8) நந்தன நாட்கள்
9) இதயத்தின் நாற்காலி
10) காத்திருந்த காற்று
11) ஊர்வலம்
12) கண்ணீர் பூக்கள்.

சிறுகதை:

"திருவிழாவில் நடந்த நாடகத்தை பார்க்க 2 பேர் வருகிறார்கள். வெளிச்சத்தில் முகத்துக்கு முகம் பார்த்து வானில் சிறகடித்து பறக்கிறார்கள். நந்தவனத்தில் நாற்காலி போட்டு அவளுக்காக அவன் காத்திருக்கிறான். ஆனால் அவள் வரவில்லை. கடைசியாக அவளுடைய இறுதி ஊர்வலத்தில் அவனால் கண்ணீர்தான் சிந்த முடிந்தது"

மேற்கண்ட கதையில் இடம்பெறும் ஒவ்வொரு வார்த்தையும் மேத்தா அவர்களின் நூல்களை குறிப்பதாகும்.

1) திருவிழாவில் - திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்.
2) நடந்த நாடகத்தை- நடந்த நாடகங்கள்
3) 2 பேர் வருகிறார்கள் - அவர்கள் வருகிறார்கள்
4) வெளிச்சத்தில் -வெளிச்சம் வெளியே வரவில்லை
5) முகத்துக்கு முகம் பார்த்து - முகத்துக்கு முகம்
6) வானில் சிறகடித்து -ஒரு வானம் இரு சிறகு,மனச் சிறகு
7) நந்தவனத்தில் - நந்தன நாட்கள்
8) நாற்காலி- இதயத்தின் நாற்காலி
9) அவன் காத்திருக்கிறான் - காத்திருந்த காற்று
10)இறுதி ஊர்வலத்தில் - ஊர்வலம்
11) கண்ணீர்தான் சிந்த முடிந்தது -கண்ணீர் பூக்கள்.

No comments:

Post a Comment